திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் தொடர்ந்து இன்று நான்காவது நாளாக மேற்கு வங்கத்தில் நடைபெற்று வருகிறது. சாலை மற்றும் ரயில் முற்றுகை சம்பவங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலில் நடைபெற்று வருகிறது. தேசிய குடிமக்கள் பதிவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தையும் எதிர்ப்பதில் முன்னணியில் இருக்கும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சர்ச்சைக்குரிய குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிராக இன்று பிற்பகல் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்று வருகிறது. இது "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்ற ஆளுநர் ஜகதீப் தங்கரின் கருத்தை புறக்கணித்து முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்து வரும் பேரணியில் ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்று உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CAA-வுக்கு எதிரான மெகா பேரணியில் கலந்துக் கொண்ட மம்தா பானர்ஜி கூறியது, "பாஜகவினர் மட்டுமே இங்கு தங்கியிருக்கும், மற்றவர்கள் அனைவரும் வெளியேறும்படி செய்யப்படுவார்கள். இதுதான் அவர்களின் அரசியல். இது ஒருபோதும் நடக்காது. இந்தியா அனைவருக்கும் உரியது. அனைவரும் இணைந்து வாழ்ந்தால் தானே நாடு வளர்ச்சி அடையும்? நாம் அனைவரும் குடிமக்கள். நீங்கள் வாக்களிக்கவில்லையா? நீங்கள் இங்கு வசிக்கவில்லையா? எதற்கு குடியுரிமைச் சட்டம்? 


 



திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நான் தனியாக இருந்தேன். இன்று டெல்லி முதல்வர், பீகார் முதல்வர் உட்பட பலர் இந்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். என்.ஆர்.சி., மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் அனுமதிக்க வேண்டாம் என்று பலரிடம் கூறியுள்ளேன். அந்த வகையில், மத்திய பிரதேச முதல்வர், பஞ்சாப் மாநில முதல்வர், சத்தீஸ்கர் முதல்வர் மற்றும் கேரள முதல்வர் என எல்லோரும் இதைச் சொல்ல வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.


திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போரட்டத்தில் சிலர் பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு காழ்ப்புணர்ச்சி மற்றும் தீ விபத்துக்களில் ஈடுபட்டனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்களன்று பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.