தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(PF) வட்டி விகிதம் 8.65%-மாக உயர்வு!
PF எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65%-மாக உயர்த்தப்பட்டுள்ளது!
PF எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65%-மாக உயர்த்தப்பட்டுள்ளது!
முறைபடுத்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளார்கள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்று அவர்களது அடிப்படை சம்பளத்திலிருந்து 12% பிடிக்கப்படுகிறது.
இந்த தொகையுடன், அதே அளவு தொகையை நிறுவனப் பங்களிப்பாக சேர்த்து, தொழிலாளரது ப்ராவிடன் பண்ட்(PF) கணக்கில் சேர்க்கப்படும்.
இந்த நிலையில் வருங்கால வைப்பு நிதிக்கு வரும் நிதியாண்டில் வழங்கப்படும் வட்டி விகிதம் குறித்து வாரியத்தின் அறங்காவலர் குழு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தலைமையில் கூடி விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் PF கணக்குதாரர்களின் ஆண்டு வட்டியை தற்போதுள்ள 8.55%-ல் இருந்து 8.65%-மாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதியமைச்சகம் அனுமதி அளி்த்தவுடன் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே EPFவட்டி விகிதம் குறைக்கப்பட்டே வந்தது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வட்டி விகிதம் சற்று உயர்த்தப்பட்டுள்ளது.