சிக்கிம் மாநில முதல்வராக சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா தலைவர் பிரேம்சிங் தமாங் இன்று பதவியேற்கின்றார்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

17-வது மக்களவைக்கான தேர்தலுடன், 32 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிக்கிம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைப்பெற்றது. இத்தேர்தலில் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சிக்கு சிக்கிம் கிராந்திகர் மோர்ச்சா கட்சி முடிவு கட்டியுள்ளது.


சிக்கிம் தேர்தலை பொறுத்தவரையில் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சிக்கும், சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.


அந்த மாநிலத்தில் 1994-ஆம் ஆண்டில் இருந்து 5 முறை முதல்வராக இருந்த பவன்குமார் சம்லிங்க் மீண்டும் களம் கண்டார். ஆனால், பவன்குமாரின் கட்சி 15 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று ஆட்சியை இழந்தது. 


சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று பவன் குமார் சம்லிங்கின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனையடுத்து இம்மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில் இன்று சிக்கிம் முதல்வராக பிரேம்சிங் தமாங் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


முன்னதாக பி.எஸ்.கோலே என்று அழைக்கப்படும் பிரேம்சிங் தமாங் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 2016–ம் ஆண்டு ஒரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்ததால் இதுகுறித்து சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத் சட்ட ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் தமாங்கை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்புவிடுத்தார். தமாங் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு காங்டாக் பால்ஜோர் ஸ்டேடியத்தில் சிக்கிம் முதல்வராக பதவி ஏற்கிறார். அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.