PUBG விளையாதுவதற்கு தடையாக இருந்த தந்தையின் தலையை துண்டாக வெட்டிய மகன் கைது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய காலத்தில் உள்ள இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் சில மொபைல் விளையாட்டுகளில் PUBG என்ற மொபை விளையாட்டு தீவிரமடைந்து வருகிறது. இதை அதிக நேரம் விளையாடுவதால் அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உண்டு. இந்த நிலையில், PUBG விளையாதுவதற்கு தடையாக இருந்த தந்தையின் தலையை துண்டாக வெட்டியா சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


பெங்களூருவை சேர்ந்த  ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சங்கரப்பா குமாரின் மகன்  ரகுவீர். இவர் ஆன்லைன் கேம்மான PUBG விளையாட்டிற்கு அடிமையாக இருந்திருக்கிறார். அதிக நேரம் கேம்மில் மூழ்கி இருக்கும் மகனை சங்கரப்பா கண்டித்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி இவர்களுக்குள்  சண்டை வருவது வழக்கமாக இருந்திருக்கிறது.


இந்நிலையில் நேற்று விளையாட்டு தொடர்பாக இருவரும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது . இதனால் ஆத்திரமடைந்த ரகுவீர்  தந்தையை கொலை செய்துவிட்டால் விளையாடுவதற்கு தடையிருக்காது என எண்ணி நேற்றிரவு தனது தந்தை என்றும் பாராமல் தலை, கை, கால் உள்ளிட்டவற்றை துண்டித்து கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்  ரகுவீரை கைது  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.