Pulse Oximeter கோவிட்-19 இறப்புகளை குறைக்க பெரிதும் உதவியது: Arvind Kejriwal
பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்ட, இந்த பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள், கொரோனா தொற்றுநோயாளிகளில் இறப்பு எண்ணிக்கையை பெருமளவு குறைக்க உதவியுள்ளது.
பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள் (Pulse Oximeter) கோவிட்-19 இறப்புகளை குறைக்க பெரிது உதவியது என அர்விந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அவர்களின் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கணக்கிட பயன்படுத்தப்படும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள், covid-19 தொற்று நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததாக கூறினார்.
ALSO READ | நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் : அமைச்சர் பிரகலாத் ஜோஷி
பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்ட, இந்த பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றுநோயாளிகளில் இறப்பு எண்ணிக்கையை பெருமளவு குறைத்து விட்டது என கூறினார்.
பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள் மூலம் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு கண்காணிக்கப்படும் போது, உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது உடனே கண்டறியப்பட்டு, இதனால் அவர்களுக்கு விரைவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்று கேஜரிவால் கூறினார். பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள் மூலம் கணக்கிடும் நோயாளிகள், அளவு குறைந்தால் உடனே எங்களுக்கு தெரிவித்தனர். அதனால், அவர்கள் வீட்டிற்கு உடனடியாக ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் அனுப்பப்பட்டன என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குறிப்பிட்டார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தோற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக இருந்தது, கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,577 ஆகும்.
ALSO READ | வரலாற்றில் முதல் முறையாக எல்லையை கடந்த இந்திய சரக்கு ரயில்…!!!
ஞாயிற்றுக் கிழமை நிலவரப்படி, தில்லியில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,494 ஆக உயர்ந்தது. இதில் 89,968 பேர் குணமடைந்து விட்டனர். 19,155 ஆக்டிங் நோயாளிகள் உள்ளனர். இது வரை, இந்த தொற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,371 ஆகும்.