3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அர்ஜென்டினா அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் அவரது மனைவி ஜுலியானா அவாடா மற்றும் மகள் ஆன்டோனியா உடன் வந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் மவுரிசியோ மேக்ரிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவர்களைக் கைகுலுக்கி வரவேற்றனர். பின்னர் இந்திய பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் இரு நாடுகளிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுக்குறித்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 


அப்பொழுது பேசிய பிரதமர் மோடி, புல்வாமா மாவட்டத்தில் நடந்த கொடூரமான தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் பேச்சுவாரத்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. பாகிஸ்தானுக்கு பல அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தீவரவாதத்தை கட்டுப்படுத்துவதில் அவர்கள் தயங்கம் காட்டி வருகின்றன. இதுக்கூட பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கு சமம் ஆகும். இனி பேச்சுவாரத்தை நடத்துவதுவதற்க்கான நேரம் இல்லை. செயல்பாட்டில் இறங்குவதற்கான நேரம். உலக நாடுகள் ஒன்று சேர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.