வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு சன் குழுமம் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் 3 வாரங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. எனவே, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.... இதுவரை கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 164-ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து, கேரளாவில் காஸர்காட் மாவட்டத்தை தவிர 13 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வயநாடு மற்றும் பத்தனம் தட்டா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கடற்படையின் 21 குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.


அந்த வகையில் தற்போது பாஞ்சாப் மாநில அரசு ரூ.10 நிவாரண நிதியாக அறிவித்துள்ளாது. இதில் 5 கோடி ரூபாய் உடனடி நிதியாக அனுப்பப்படும் எனவும், 5 கோடி ரூபாய் உணவுப் பொருட்களாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்!