பள்ளி மாணவிகளின் ஆடைகளை அகற்றி சோதனை செய்த ஆசிரியயை பணியிடமாற்றம் செய்து பஞ்சாப் முதல்வர் அமரேந்திர் சிங் உத்தரவிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநிலத்தின் பால்ஷிகா மாவட்ட பள்ளி ஒன்றில், மாணவி ஒருவர் பயன்படுத்தப்பட்ட Sanitary Pad தவறுதலாக கழிவறையில் விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தினை அடுத்து குறிப்பிட்ட மானவியினை கண்டுபிடிக்க அப்பள்ளி ஆசிரியை மாணவிகளின் ஆடைகளை அகற்றி சோதனை செய்துள்ளார். இந்த விவகாரத்தினை அடுத்து அப்பள்ளி மாணவிகள் கல்வி நிற்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.


இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, விவகாரம் மாநில அரசினை எட்டியுள்ளது. இதனையடுத்து மாநில முதல்வர் அமரேந்திர சிங், கல்வி துறை அமைச்சர் கிருஷ்ண குமார் தலைமையில் விசாரணை குழு அமைத்துள்ளார். இந்த விசாரணைக்கு அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியயை பணியிடமாற்றம் செய்து பஞ்சாப் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


குண்டல் கிராமத்தில் மூன்று நாட்களுக்கு முன்னதாக நிகழ்ந்துள்ள இச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட மாணவியினை கண்டறிய குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மாணவகளின் ஆடைகளை அகற்ற சொல்லி சோதனை மேற்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் கண்ணீருடன் இந்த சம்பவம் குறித்து வெளிக்கொண்டுந்துள்ளனர். 


இந்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை மீது விசாரணை நடைப்பெற்ற வரும் நிலையில் தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் முழு விவரங்கள் தாக்கல்செய்யப்பட்ட பின்னர் ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விசாரணை குழு தலைவர் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்!