உத்தரபிரதேசத்தின் ஜலான் மாவட்டத்தில் உள்ள கியோலாரி கிராமத்தைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி தெருநாய் கடித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு கடந்த திங்கள்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் இந்த 2 வாரத்துக்குள் அந்த சிறுமி சுமார் 40 பேர் வரை கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரேபிஸ் பரவுவதற்கான வாய்ப்புள்ளதாக அந்த கிராமமே அரண்டு போயுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கியோலாரி கிராமத்தில் உள்ள தனது தாய் மாமா வீட்டிற்கு இரண்டு வாரங்களுக்கு முன் சிறுமி சென்று இருந்தபோது, தெருநாய் ஒன்று அவரை கடித்தது. ஆனால் சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல், உள்ளூரில் உள்ள வேட்டைக்காரரிடம் சென்று காட்டி மருந்து கொடுத்ததாக தெரிகிறது. மேலும் வெறி நாய் கடித்ததால் ஏற்பட்ட அறிகுறிகளை குடும்பத்தினர் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.மேலும் சிறுமி தன்னைச் சுற்றியுள்ளவர்களை கடித்தும், நகங்களால் கீறியும் உள்ளாள். சிறுமியைக் கடித்த அந்த நாய் இறந்துவிட்டதாக கிராம மக்கள் கூறியுள்ளனர், இதனால் ரேபிஸ் பரவும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.



மேலும் படிக்க | இந்தியாவின் ‘இந்த’ மாநிலங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்


கடந்த வெள்ளிக்கிழமை, சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து மயங்கி விழுந்துள்ளார். சிறுமியை உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து உயர்தர சிகிச்சைக்காக ஜான்சி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுமியை காப்பாற்ற முயற்சித்த போதிலும், கடந்த திங்கள்கிழமை சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.



இதனையடுத்து சிறுமியால் கடிக்கப்பட்ட கிராம மக்களும் உறவினர்களும் கடும் பீதியடைந்தனர். தங்களுக்கும் ரேபீஸ் நோய் பரவிவிடுமோ என பயந்துள்ளனர். ஆனால் அரசு மருத்துவமனையில் ரேபீஸ் தடுப்பூசி கைவசம் இருப்பதாகவும், அதனால் மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | பாஜகவின் 3வது ஆட்சி காலத்தில் இந்தியா உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும்: பிரதமர் மோடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ