பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது..நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.


5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரும் தொடங்குகிறது. 5 மாநிலத் தேர்தல்களுக்காக தாமதப்படுத்தப்பட்ட இக்கூட்டத் தொடரின் போது, மாநிலங்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா உள்பட எட்டு முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. இதே போன்று மக்களவையில் 15 மசோதாக்கள் தாக்கலாகின்றன.


மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்த மசோதா, நிறுவனங்கள் சட்டச் சீர்திருத்த மசோதா ஆகியவையும் மத்திய அரசின் இலக்காக உள்ளன.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுககு முன்பாக நடைபெற உள்ள முழு அளவிலான கூட்டத் தொடர் இதுவாகும்.


எனவே, கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை அமைதியாக செயல்பட வைக்க எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கோருகிறது. ரபேல் விமானங்கள் விவகாரம், சிபிஐ இயக்குனர்கள் மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்தியஅரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்துள்ளன.