ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்ப்பட்ட ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்த வந்த நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதல் குறித்து விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை எனக்கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்கிறோம் என தீர்ப்பு அளித்தது.


இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கே.எம் ஜோசப், எஸ்.கே கவுல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 


அப்பொழுது அரசு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், நாங்கள் தாக்கல் செய்த சிஏஜி அறிக்கையில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளது. அந்த பக்கங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.


திருடப்பட்ட ரபேல் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த ஆவணங்களை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளக்கூடாது. அனுமதி இல்லாமல் தேசிய பாதுகாப்பு ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைகளுக்கு பாதகம் ஏற்பட்டு உள்ளது. மேலும் இது நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்ப்படுத்தும். எனவே ரபேல் ஆவணங்களை நீதிமன்றம் ஆதாரங்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.