துபாய்:- ஐசிசி கமிட்டி ராகுல் டிராவிட்(இந்தியா) மற்றும் மஹளா ஜெயவர்த்தனே(இலங்கை) ஆகியோருக்கு ஐசிசி கமிட்டியில் உறுப்பினர் பதவி 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வழங்கியுள்ளது. இவர்கள் இருவருமே முன்னாள் கேப்டன் என்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் ஐசிசி கமிட்டியில் 3ஆண்டு காலம்  


உறுப்பினராக இருப்பார்கள். இந்த மாதம் இறுதியில் நடக்கவிருக்கும் ஐசிசி கமிட்டியின் முதல் கூட்டத்தில் இருவரும் கலந்து கொள்வார்கள்.


ஐசிசி கமிட்டியில் உறுப்பினர் இருக்கும் குமார் சங்கக்கரா மற்றும் எல்.சிவராம கிருஷ்ணன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனை  தொடர்ந்து டிராவிடும், ஜெயவர்த்தனே இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


ஏற்கனவே ஐசிசி கமிட்டியில் அனில் கும்ப்ளே மற்றும் ரவி சாஸ்திரி  இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் சஷாங் மனோகர் ஐசிசி சேர்மன் பதவிக்குத் 


தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.