பெங்களூரு பல்கலைக்கழகம் அறிவித்திருந்த டாக்டர் பட்டத்தை பெற ராகுல் டிராவிட் மறுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2014-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் ராகுல் டிராவிடுக்கு கர்நாடகாவின் குலர்கா பல்கலைக் கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. அதேபோல தற்போது பெங்களூரில் உள்ள விஸ்வேஷ்வரய்யா பொறியியல் கல்லூரி டிராவிட்டுக்கு மற்றொரு கெளரவ பட்டம் வழங்க திட்டமிட்டுள்ளனர். வரும் 27-ம் தேதி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின் போது டிராவிட்டுக்கு பட்டம் அளிக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் இதைக்குறித்து ராகுல் டிராவிட் கூரியதாவது:- தானே கிரிக்கெட் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வாங்க ஆசைப்படுவதாகவும், அதனால் தனக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டம் வேண்டாம் என்றும் டிராவிட் கூறியுள்ளார். இச்செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


தற்போது 19 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிராவிட் உள்ளார். இவர் இந்தியாவுக்காக 164 டெஸ்ட் மற்றும் நாட்டின் 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.