புது டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்பிஜி விலையை பெருமளவில் உயர்த்தியிருப்பது குறித்து பாஜகவை குறிவைத்துள்ளார். மத்தியில் யுபிஏ கூட்டணி ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை ராகுல் பகிர்ந்துள்ளார். அதில் ஸ்மிருதி இரானி ஒரு சிலிண்டரை வைத்துக்கொண்டு சாலையில் போராட்டம் நடத்துகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த புகைப்படத்தைப் பகிர்ந்த ராகுல் காந்தி, "எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ .150 ஆக உயர்த்தியை எதிர்க்கும் இந்த பாஜக உறுப்பினர்களுடன் நான் உடன்படுகிறேன். உயர்த்தப்பட விலையை திரும்பப் பெறுமாறு ராகுல் கோரிக்கையும் வைத்துள்ளார். #RollBackHike என்ற ஹெஷ்டேக்கும் போட்டுள்ளார்.


 



எப்பொழுது உயர்த்தப்பட்டது?
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன், பெட்ரோலிய நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டரின் விலையை புதன்கிழமை உயர்த்தி உள்ளது. இது நாட்டின் நுகர்வோருக்கு தலையில் பெரும் அடியாக விழுந்துள்ளது. மானியம் இல்லாத 14.2 கிலோ சிலிண்டர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ .149 வரை விலை உயர்ந்துள்ளது. 


மெட்ரோ நகரங்களில் விலை:
நாட்டின் தலைநகரான டெல்லியில், மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .144.50 அதிகரித்துள்ளது. அதேபோல சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆக உள்ளது. கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு புதிய விலையாக ரூ.896 உள்ளது. மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆக ஒரு சிலிண்டரின் விலை உள்ளது. இந்த விலை ஏற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.


ராகுல் காந்தி பகிர்ந்த படம் எப்போது எடுக்கப்பட்டது?
ஸ்மிருதி இரானியின் இந்த புகைப்படம் 1 ஜூலை 2010 முதல். அப்போது அவர் பாஜகவின் மஹிலா மோர்ச்சா தலைவராக இருந்தார். அப்போதைய மேற்கு வங்க பாஜக தலைவர் ராகுல் சின்ஹாவுடன் சேர்ந்து கொல்கத்தாவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். அதிகரித்து வரும் எரிபொருள் விலையை எதிர்த்து ஸ்மிருதி இரானி கட்சித் தொண்டர்களுடன் சாலை முற்றுகையிட்டார். அந்த நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ 2 அரசு மத்திய அரசாக இருந்தது குறிப்பிடத்தக்கது.