பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக - காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தந்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 


 



"நாட்டின் காவல்காரன் "நாட்டு மக்களுக்காக அரசு கஜானாவை எப்போது திறக்கப் போகிறார்?" 


அனில் அம்பானிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயை ரபேல் ஊழல் மூலம் அளித்துள்ளார் பிரதமர் மோடி.


ஆனால் 50 கோடி இந்தியர்களுக்கு ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்திற்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் பிரதமர் மோடி.


5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு என்பது ஆண்டுக்கு ஒருவருக்கு 40 ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


வாவ் மோடி ஜி வாவ்... மக்களுக்கு வெறும் 40 ரூபாய், அம்பானிக்கு  1.30 கோடி. 


விளம்பரம் மட்டுமே உங்கள் நோக்கம்?


இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்..