’ஓபிசி, தலித் பழங்குடியினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை’ ராகுல் காந்தி அட்டாக்
ஓபிசி, தலித் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீண்டும் ஒருமுறை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் கலந்துரையாடினார்.
Rahul Gandhi Interviews With Satya Pal Malik: கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் உரையாற்றினார். இந்த 28 நிமிட உரையாடலில், மணிப்பூர் வன்முறை, ஜம்மு காஷ்மீர், புல்வாமா தாக்குதல், விவசாயிகள் போராட்டம், ஜாதிவாரி கணக்கெடுப்பு புதிய நாடாளுமன்றம், மகளிர் இடஒதுக்கீடு, ஆர்எஸ்எஸ், அதானி உள்ளிட்ட பல விஷயங்களை சத்யபால் மாலிக்குடன் ராகுல் காந்தி விவாதித்தார். அதுக்குறித்து பார்ப்போம்.
ஜம்மு காஷ்மீர்
ராகுல்: ஜம்மு காஷ்மீர் பற்றி உங்கள் கருத்து என்ன? இங்கே எப்படி அமைதி இருக்கும்?
மாலிக்: இங்குள்ள மக்களை பலவந்தமாக வற்புறுத்தி எதையும் சாதிக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் மக்க்களின் மனங்களை வெல்வதன் மூலம் எதையும் செய்ய முடியும். அவர்களின் மாநில அந்தஸ்து திரும்பப் பெறப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் (மத்திய அரசு) சட்டப்பிரிவு 370 ஐ திரும்பப் பெற்று யூனியன் பிரதேசத்தை உருவாக்கினார். மாநில காவல்துறை கிளர்ச்சி செய்யக்கூடும் என்று அவர்கள் (மத்திய அரசு) பயந்தனர். ஆனால் ஜம்மு காஷ்மீர் காவல்துறை எப்போதும் மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்தது. மீண்டும் மாநில அந்தஸ்து தருவதாக அமித்ஷா உறுதியளித்துள்ளார். எனவே, அவர்கள் விரைவில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளித்து அங்கு தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
ராகுல்: ஊடகங்கள், அதிகாரத்துவம் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி. இங்கு ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் இல்லை. இதில் உங்கள் கருத்து என்ன? ஒருசிலர் மட்டும் அதிக அதிகாரத்தை கையில் வைத்துள்ளனர். இதை எப்படி மாற்ற முடியும்?
மாலிக்: லோஹியா ஒருமுறை கூறியிருந்தார், மக்கள் விரும்பாவிட்டாலும் கோவா சுதந்திரத்திற்காக அமைக்கப்பட்ட கமிட்டியில் 48% உயர்சாதி வகுப்பினர் சேருவார்கள் என்றார். தற்போது இந்த சிஷ்டம் அனைத்து துறையிலும் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதை மாற்ற முடியும் வேண்டும் என்றால், எல்லா இடங்களிலும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சதவீதம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இது தவிர அந்த பிரிவினர் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் படிக்க | நடிகர் விஜய்யுடன் இணைந்து செயல்படத் தயார்: சீமான்
மணிப்பூர் வன்முறை
ராகுல்: மணிப்பூரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மத்திய அரசாங்கம் உண்மையில் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது.
மாலிக்: மணிப்பூரில் அரசுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. முதலமைச்சரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவர் நீக்கப்படாமல் இருக்கிறார். மணிப்பூர் சம்பவங்களை மக்கள் மறக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளன. இப்போது சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் மோடி அரசு மீண்டும் வராது என்றார்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்
ராகுல்: இந்திய அரசியலில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒன்று காந்தியவாதி மற்றொன்று ஆர்.எஸ்.எஸ். காந்தியவாதியில் அகிம்சை, சகோதரத்துவம் என்ற சித்தாந்தம் உள்ளது. இரண்டாவது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தட்டில் வெறுப்பு மற்றும் வன்முறை உள்ளது. இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
மாலிக்: லிபரல் இந்துத்துவத்தின் வழியைப் பின்பற்றும்போது தான் இந்தியா ஒரு நாடாக நிலைத்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். இது காந்தியின் பார்வை. அவர் ஊர் ஊராகச் சென்றார். மக்களை சந்தித்தார். பின்னர் தான் இந்த இடத்திற்கு வார முடிந்தது. இந்த சித்தாந்தத்தில் இருந்தால்தான் நாடு இயங்க முடியும், இல்லையெனில் துண்டு துண்டாக விழும். நாம் அனைவரும் சண்டை போடாமல் ஒன்றாக வாழ வேண்டும் என்றார்.
காந்தியின் காங்கிரஸின் பார்வையில் இருந்து நாம் ஏன் வேறுபட்டிருக்கிறோம் என்பதை நம் மக்களிடையே சரியாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். நாம் ஏன் காந்தியின் பார்வையில் இருந்து விலகி இருக்கிறோம்? என்ற அரசியலை பேச வேண்டும். ஆனால் மக்களும் பேசுவதில்லை. அவர்களும் பேச வேண்டும் என்றார்.
நாட்டின் பிரச்சினை
ராகுல்: எப்பொழுதெல்லாம் அரசுக்கு அழுத்தம் வருகிறதோ அப்போதெல்லாம் எதையாவது சொல்லிக் கொண்டு வருகிறார்கள். கௌதம் அதானி குறித்து நான் விவாதித்தபோது, முதலில் டிவி அணைக்கப்பட்டது, பின்னர் நான் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டேன். பின்னர் சிறப்பு அமர்வு குறித்து பேசப்பட்டது, அதில் இந்தியா மற்றும் பாரத் குறித்த விவாதம் நடந்தது. இறுதியில் இவர்கள் (மத்திய அரசு) மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தனர். அதுவும் இப்ப வராது 10 வருஷம் கழிச்சு. புல்வாமாவாக இருந்தாலும் சரி, பெண்கள் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அந்த விவாதத்தை திசைதிருப்ப அவர்களுக்கு இது நல்ல வழி இருக்கிறது.
மாலிக்: அவர்கள் ஒரு நிகழ்வை உருவாக்குகிறார்கள். பிறகு அதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவிலும் அப்படித்தான் செய்யப்பட்டது. பெண்கள் எதையும் பெறக்கூடாது. ஆனால் அவர்கள் பெண்களுக்காக எவ்வளவு பெரிய வேலை செய்தார்கள் என்று காட்டப்பட்டது. புதிய பார்லிமென்ட் தேவை இல்லை. அந்த பழைய கட்டிடம் இன்னும் பல வருடங்கள் நீடித்திருக்கும். ஆனால் பிரதமர் மோடி கட்டிய பார்லிமென்ட் என்று சொல்ல வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டது.
மேலும் படிக்க | Thanjavur News: திருமணமான புதுப்பெண் மர்ம மரணம்! கணவன் அடித்து துன்புறுத்தினாரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ