காங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி மீண்டும் மறுப்பு..!
ராகுலே காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டுமென டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தல்!!
ராகுலே காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டுமென டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தல்!!
டெல்லி: ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற வேண்டும் என ராகுல் வீட்டின் முன் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு தாமாக பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி முடிவு செய்தார். ஆனால் அவர் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளை இதுவரை ராகுல் காந்தி ஏற்கவில்லை. காங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி கலந்துகொண்டனர். அப்போது, ராகுல் தொடர்ந்து கட்சி தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் ராகுல் காந்தி அவர்களுக்கு பிடி கொடுக்கவில்லை என தெரிகிறது. ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராகுல் காந்தியின் வீட்டின் முன் ஏராளமான இளைஞர் காங்கிரசார் திரண்டு போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல் திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.