ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கபடும்: ராகுல் வாக்குறுதி
ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டுவந்த நல்ல திட்டங்களை மோடி அழித்து விட்டார் என ராகுல் குற்றச்சாட்டு!!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டுவந்த நல்ல திட்டங்களை மோடி அழித்து விட்டார் என ராகுல் குற்றச்சாட்டு!!
இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சரம் செய்து வருகிறது. இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்திற்கு கண்டிப்பாக சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.
மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை உறுதி திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அழித்து விட்டார். நாங்கள் கொண்டு வந்துள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் வறுமையை ஒழிப்பதற்கான அமைதியான ஆயுதமாகும் என தெரிவித்துள்ளார். நான் மோடி இல்லை, நான் பொய் சொல்லவில்லை. இந்திய ரூபாயின் மதிப்பு ரூ .15 லட்சம் ஆகும். இந்தியாவின் வறுமைக்கோட்டிற்கு ரூ. 15 லட்சம் கொடுக்க முடியாது. ஆனால், இந்தியாவில் ஏழைகளுக்கு ஒரு வருடம் 72,000 ரூபாய் இந்திய அரசு வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.