ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஒரு இடைத்தரகர் போல் செயல்பட்டு உள்ளார் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது... 



ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர்  நரேந்திர மோடி ஒரு இடைத்தரகர் போல் செயல்பட்டு உள்ளார்.  அனில்  அம்பானி  நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போர் ஜெட் ஒப்பந்தத்தை பெற உதவுவதற்காக அனில் அம்பானியின்  இடைத்தரகராக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார். ஒப்பந்தம் இறுதியாகும் 10 நாட்கள் முன் பிரஞ்சு பாதுகாப்பு அமைச்சரை அனில் அம்பானி சந்தித்துள்ளார்.


பாதுகாப்பு அமைச்சக நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் உளவு பார்த்து உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ரகசிய விதிமுறைகளை  மீறிய்ள்ளார். அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்  என கடுமையாக சாடினார்.



#ரபேல்_ஒப்பந்தம்...


ஐரோப்பிய நாடான, பிரான்ஸில் உள்ள ‘டசால்ட்’ நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். 


இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்த வந்த நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ரபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி ரபோல் போர் விமான ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ளார் என ராகுல் காந்தி மீண்டும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்ததக்கது.