காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்களன்று தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக பாஜக-வை மீண்டும் தாக்கியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகுல் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில்., பாஜக வேட்பாளர் ஒருவர் பேசுகையில் ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த பொத்தானை அழுத்தினாலும், வாக்குகள் ஆளும் கட்சிக்குச் செல்லும்’ என்று கூறியது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது.


பாஜக-வின் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று வருகிறது. தற்போது அவரது ஆட்சி காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 90 தொகுதிகள் கொண்ட ஹரியாணாவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று நடைப்பெற்று வருகிறது. நடைப்பெற்று வரும் தேர்தலில் ஆசாந்த தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பக்ஷிஷ் சிங் விர்க் என்பவர் தனது பிரச்சாரத்தின் போது ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த பொத்தானை அழுத்தினாலும், வாக்குகள் ஆளும் கட்சிக்குச் செல்லும்’ என்று குறிப்பிட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இந்த வீடியோவினை தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் பாஜக-வின் ஒரு நேர்மையான மனிதர் என்ற தலைப்பில் இந்த வீடியோவினை அவர் பகிர்ந்துள்ளார். 



என்றபோதிலும் இந்த வீடியோ ஒரு "போலி" வீடியோ என்று விர்க் கூறியுள்ளார், மேலும் இந்த வீடியோ அவரையும், பாஜகவையும் இழிவுபடுத்த எதிரிகள் மேற்கொண்ட முயற்சி எனவும் விளக்கம் அளித்துள்ளார்.


இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் விர்க்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன் முன்னாள் துணை தேர்தல் ஆணையர் வினோத் ஜுட்ஷியை கர்னாலில் உள்ள அசாந்த் தொகுதிக்கு அனுப்பிவைத்துள்ளது.


"தேவையான திருத்த நடவடிக்கை எடுக்கவும், சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தலை உறுதி செய்யவும் ஜுட்ஷியிடம் கோரப்பட்டுள்ளது" என்று வாக்கெடுப்பு குழு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றங்களுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை(இன்று) நடைபெறுகிறது. இதன் முடிவுகள் அக்டோபர் 24 ஆம் தேதி அறிவிக்கப்படும். முன்னதாக 2014-ஆம் ஆண்டு தேர்ததில் ஹரியானாவில் பாஜக 47 இடங்களை வென்றது, மேலும் இந்த முறை 75-க்கும் அதிகமான இலக்கை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.