பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் உத்திர பிரதேச(கிழக்கு) காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விரைவில் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இம்மாத இறுதியில் அவர் தமிழகம் வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா காந்தி இதுவரை தேர்தல் பிரசாரம் மட்டுமே செய்து வந்தார். இந்நிலையில்  அவரை உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளராக சமீபத்தில் ராகுல் காந்தி நியமனம் செய்தார். 


இதன்மூலம் அதிகாரப்பூர்வமாக கட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் பிரியங்கா காந்தி வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என காங்கிரஸ் தொண்டர்கள் கருதுகின்றனர்.


இந்த மாத இறுதியில் தமிழகம் வரும் பிரியங்கா காந்தி, திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
முன்னாதக தமிழக அரசியலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்திருந்தார். பிரியங்கா காந்தியின் தமிழக பயணத்தின்போது கமல்ஹாசன் அவரை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 


கமல்ஹாசனை தவிர்த்து மற்றும் சில அரசியல் தலைவர்கள் பிரியங்கா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.