சீக்கிய கலவரம் குறித்து சாம் பிட்ரோடா கருத்திற்கு ராகுல் கண்டனம் தெரிவித்ததோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பிட்ரோடாவுக்கு ராகுல் உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரததில் சீக்கியர்களை கொலை செய்ய பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பா.ஜ. குற்றம்சாட்டியது. பிட்ரோடாவின் கருத்து காங்கிரஸ் கட்சியின் குணத்தையும், மனநிலையையும் காட்டுகிறது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார்.


இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ரோடா கூறுகையில், பா.ஜ.வின் மிகப்பெரிய பொய் இது. 1984 ஆம் ஆண்டில் நடந்தது குறித்து பா.ஜ.வுக்கு இப்போது என்ன கவலை. கலவரம் நடந்தது நடந்து விட்டது. முடிந்து போன விஷயம் என கூறினார். பிட்ரோடாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், பிட்ரோடாவிற்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளது.


இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், சாம் பிட்ரோடாவின் இத்தகைய கருத்து எல்லை மீறீயதாகும். புத்தியில்லாமல் தெரிவித்த இந்த கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கிறேன். பெரும் வலியை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன். இதற்காக அவர் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். 



இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சை நான் எப்போதும் ஊக்குவிப்பதில்லை. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில், கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும்,சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்த கலவரத்தில் நடந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த விசயத்தில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.