புதுடெல்லி: ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு தாமதம் காட்டி வருகிறது. இதனால், மனமுடைந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷான் கிரிவால் டெல்லியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரரின் உடல்  டெல்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா ஆகியோர் டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, ராகுல் காந்தியை கைது செய்த போலீசார் சில மணி நேரம் கழித்து விடுதலை செய்தனர்.


அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொள்வார் என்று கூறியுள்ளார்.