நாடாளுமன்ற தேர்தலில் ராகுலுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்
ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்து வருபவர்களிடம் இருந்து நாம் மக்களை மீட்க வேண்டும் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு
ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்து வருபவர்களிடம் இருந்து நாம் மக்களை மீட்க வேண்டும் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி, கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில், கட்சியின் உயர்நிலைக் குழுவான காரிய கமிட்டி-யை புதிதாக நியமித்து கடந்த சிவை கிழமை (ஜூலை 17) உத்தரவிட்டார்.
புதிய காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினர்களாக ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஏ.கே.அந்தோணி, உம்மன் சாண்டி, சித்தராமையா, முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். நிரந்தர அமைப்பாளர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஷீலா தீட்சித், ரந்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்ட 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐஎன்டியூசி, இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட 10 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியின் முதல் கூட்டம் இன்று நடைபெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த காரிய கமிட்டியின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில், உரையாற்றிய சோனியா காந்தி கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் ராகுல் காந்திக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றும் ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்து வருபவர்களிடம் இருந்து நாம் மக்களை மீட்க என்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.