காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிடாததால் ஒருமனதாக அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்காக நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. 


வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு ராகுல் காந்தி, மூத்த கட்சித் தலைவர்கள் மொஹ்சினா கியா மற்றும் ஷீலா தீட்சித்தை சந்தித்தார். 


காங்கிரஸ் மாநில யூனிட் தலைவர்கள், மூத்த தலைவர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் ஆகியோர் கட்சியின் மத்திய அலுவலகத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்காக ராகுல் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ராகுல் காந்தி கடந்த ஜனவரி 2013-ம் ஆண்டு காங்கிரஸ் துணைத் தலைவரானார். 


இந்நிலையில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். ராகுல் காந்திக்காக 89 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். வேறு யாரும் அவரை எதிர்த்து போட்டியிடாததால் ஒருமனதாக அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் வரும் 16-ம் தேதி ராகுல் காந்தி பதியேற்க்க உள்ளார்.