இந்திய ரயில்வே, பயணிகளின் வசதிகளை அதிகரிக்கும் நோக்கில், ரயில் போக்குவரத்து சேவையை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் வந்தே பாரத் என்னும் ரயில் சேவை மக்கள் மனதை பெரிதும் கவர்ந்துள்ளது. நாடெங்கிலும் முக்கிய நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மும்பை அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் பாதை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான இது, மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையையும், குஜராத் மாநிலத்தின் அகமதாபாதையும் இணைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், சமூக ஊடகத்தளமான X தளத்தில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் (Mumbai Ahmedabad Bullet Train) குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ரயிலின் சிறப்பு அம்சங்களை காணலாம். மோடி 3.0 ஆட்சி காலத்தில் புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று அவரது குறிப்பிட்டுள்ளார்.


ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ வெளியிட்ட வீடியோவை கீழே உள்ள X தளத்தின் இணைப்பில் காணலாம்.



புல்லட் ரயிலின் சிறப்பு அம்சங்கள்


1. மும்பை அகமதாபாத் இடையேயான 508 கிலோமீட்டர் தூரத்திற்கான இந்த ரயில், மணிக்கு அதிகபட்சமாக, 320 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்லக்கூடியது.


2. இரு முக்கிய நகரங்களுக்கு இடையான பயண தூரம் வெறும் 2 மணி நேரம் என்ற அளவில் குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


3. இந்தியாவில் முதல் முதலாக ஸ்லாப் ட்ராக் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


4. பூகம்பத்தை முன்னரே கண்டறியும் அம்சமும் இந்த புல்லட் ட்ரெயின் வழித்தடத்தில் இருக்கும்.


5. புல்லட் ரயிலின் வழித்தடத்தில் 24 நதி பாலங்கள், 28 இரும்பு பாலங்கள், ஏழு குகை பாதைகள் ஆகியவை இருக்கும். இது தவிர ஏழு கிலோ மீட்டருக்கு கடலின் அடியில் செல்லும் ரயில் பாதையும் அடங்கும்.


6. புல்லட் ரயில் திட்டத்திற்கான செலவு ஒரு லட்சத்து எட்டாயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


சென்னை மைசூர் புல்லட் ரயில் பாதை


மும்பை அகமதாபாத் தவிர, சென்னை மைசூர் இடையே, இரண்டாவது அதிவேக புல்லட் ரயில் திட்டம் (Chennai - Mysuru Bullet Train Project) அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த சென்னை பெங்களூரு மைசூரு ஆகிய நகரங்களை இணைக்கும் என்றும். சுமார் 9 ரயில் நிலையங்கள் வழியாக இந்த புல்லட் ரயில் பாதை அமையும் என்றும் கூறப்படுகிறது.


அகமதாபாத் மும்பை புல்லட் ரயில் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) அரசின் கனவு திட்டமாகும். இதற்கான கட்டுமானம் முன்னதாக, 2020 ஏப்ரலில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிராவில், திட்டத்திற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், 2023 டிசம்பர் மாதம் திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது, 2026 ஆம் ஆண்டு, திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகிறது.


மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரித்துறை விதிகளை மீறினால் சிக்கல்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ