200 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ள ராஜஸ்தானில் அடுத்த மாதம் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ம் தேதி நடைபெறும். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ராஜஸ்தானில் பாஜக தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு கட்சிகளிலும் இருந்து சில தலைவர்கள் தங்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்று கூறி ராஜினாமா செய்துள்ளனர். பிஜேபி-யில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸில் இருந்து பிஜேபிக்கும் அணி மாறியுள்ளனர். 


ஏகனவே கடந்த 15 ஆம் தேதி (வியாழக்கிழமை) 152 வேட்பாளர்கள் கொண்ட தனது முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அந்த பட்டியலில் பாஜகவில் இருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் எம்.பீ. ஹரீஷ் மீனாவுக்கு சீட் வழங்கப்பட்டது.


இன்று 32 வேட்பாளர்கள் கொண்ட தனது இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.