ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, அந்த மாநிலங்களின் முதல் அமைச்சர் யார் என்பதைக் குறித்து நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (டிசம்பர் 13) டெல்லியில் ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் யாரை நியமிக்கலாம் என்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருடன் ராகுல் காந்தி பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில முதலமைச்சரின் பெயர் முடிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சரின் பெயர் 4 மணியளவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட், துணை முதலமைச்சராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.


அதை உறுதி செய்யும் வகையில், இன்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் வேணுகோபால் செய்தியாளர்கள் சந்திப்பில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக அசோக் கெலாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என அறிவித்தார்.