பிரதாப்கர் (ராஜஸ்தான்): மணிப்பூர் போன்ற வெட்கக்கேடான சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கரில் நடந்துள்ளது. இங்கு ஒரு கிராமத்தில் ஒரு பழங்குடியினப் பெண் நிர்வாணமாக ஊர்வலம் நடத்தப்பட்டார். அவர் தாக்கப்பட்டார். இந்த அவமானகரமான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். முதல்வர் அசோக் கெலாட்டின் அறிவுறுத்தலின் பேரில், காவல்துறை இயக்குநர் ஜெனரல் உமேஷ் மிஸ்ரா வெள்ளிக்கிழமை இரவு நடவடிக்கைக்கு வந்தார். அவர் குற்றப்பிரிவை சேர்ந்த கூடுதல் காவல் துறை டைரக்டர் ஜெனரல்  பிரதாப்கருக்கு அனுப்பினார். சனிக்கிழமை காலை கிடைத்த சமீபத்திய தகவலின்படி, இந்த வழக்கில் 3  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலைப்பாங்கான கிராமத்தில் பெண்ணிற்கு நடந்த கொடூரம்


தரியாவாட் காவல் நிலைய பொறுப்பாளர் பெஷாவர் கான் கூறுகையில், இந்த கொடூர சம்பவம் வியாழக்கிழமை 21 வயது பெண்ணுக்கு எதிராக நடந்தது. பிராப்கர் அருகில் இள்ள மலை கிராமத்தில், பெண்ணுக்கு அவரது முன்னாள் கணவர் கானா மற்றும் பிற உறவினர்கள் செய்த அவமானகரமான செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடூரமாக தாக்கப்பட்டார். அதோடு நிற்காமல் அவர் நிர்வாணமாக்கப்பட்டு கிராமம் முழுவதும் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, போலீசார் நடவடிக்கை எடுக்க, முதல்வர் அறிவுறுத்தினார்.


சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோ


பழங்குடியின பெண் மிக மோசமாக நடத்தப்பட்ட கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ வெளியானதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பெண்ணின் முன்னாள் கணவர் கானா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட மற்ற நபர்களை தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர் அசோக் கெலாட், தேவையான நடவடிக்கையை உடனே எடுக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநர் உமேஷ் மிஸ்ராவுக்கு உத்தரவிட்டார். ஜெய்ப்பூர் ஏடிஜி தினேஷ் எம்என் வெள்ளிக்கிழமை இரவு பிரதாப்கருக்கு அனுப்பப்பட்டார்.


மேலும் படிக்க | தூக்கிட்ட நிலையில் இளம் நடிகை மரணம்..! கொலையா? தற்கொலையா? ரசிகர்கள் அதிர்ச்சி!


குடும்பத்தினர் இடையே தகராறு


பிரதாப்கர் மாவட்டத்தில் பெண்ணுடன் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். பெண்ணின் புகுந்த வீட்டிற்கும் பிறந்த வீட்டிற்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, புகுந்த வீட்டினர் இந்த வெட்கக்கேடான செயலைச் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பிரதாப்கர் காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் கிராமத்தில் முகாமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


வீடியோவைப் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த வசுந்தரா ராஜே 


கொடூரமான இந்த சம்பவம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் சிபி ஜோஷி கூறுகையில், 'இன்று ராஜஸ்தான் மீண்டும் அவமானமடைந்துள்ளது. பிரதாப்கர் மாவட்டத்தின் தாரியாவத் தாலுகாவின் பஹாடா கிராமப் பஞ்சாயத்தின் கீழ் கோட்டாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவம் குறித்து நிர்வாகம் அறியாதது, கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களில் ராஜஸ்தான் ஏன் முதலிடத்தில் உள்ளது என்பதை விளக்குகிறது. இந்த விவகாரத்தில் அரசை விமர்சித்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, கர்ப்பிணிப் பெண்ணை மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லும் வீடியோ வைரலானது. ஆனால் நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை என்று கூறினார். இந்த சம்பவம் ராஜஸ்தானை அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார். மேலும், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும் படிக்க | கல்லூரி மாணவியை கொல்ல முயன்ற வாலிபர்! திருமணத்திற்கு மறுத்ததால் வெறி செயல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ