இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஸ்மார்ட் வேலி பைலட் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாக்கிஸ்தான் சர்வதேச எல்லையுடன் இந்தியாவின் முதல் 'ஸ்மார்ட் வேலி' பைலட் திட்டத்தை துவக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளார். மாநில அரசுக்கு ஒரு நாள் விஜயத்தின் போது, உள்துறை மந்திரி பைலட் திட்டத்தை தொடங் குகிறார்.


செய்தி நிறுவனமான ANI-ன் தகவலின் படி, உள்துறை மந்திரி திங்களன்று காலை பல்லுராவில் எல்லை பாதுகாப்புப் படை (BSF) தலைமையகத்தை அடைந்து, படைப்பிரிவின் முயற்சியை முறைப்படி தொடக்குவார். BSF விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பின் ஒரு பகுதியாக முன்முயற்சியை மேற்கொண்டது.


இதையடுத்து இந்தியா -மங்கோலிய ராணுவ வீரர்கள், மங்கோலியாவின் உலான்பாட்டர் (Ulaanbaatar) அருகே உள்ள ராணுவ முகாமில் இணைந்து போர் ஒத்திகையை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குடன் கடந்த 10 ஆம் தேதி போர் பயிற்சி முகாம் தொடங்கியது.


மேஜர் ராகுல் துபே தலைமையிலான இந்திய படைவீரர்கள் நோமாடிக் எலிபண்ட் (nomadic elephant) என்ற பெயரில் இந்த போர் ஒத்திகையை நடத்தினர். தீவிரவாதிகளிடமிருந்து பிணைக்கைதிகளை மீட்பது போன்ற பல்வேறு உத்திகளை இருதரப்பினரும் பகிர்ந்துக் கொண்டனர். பருவ நிலைகளுக்கு ஏற்ப போரிடும் பயிற்சியையும் மங்கோலிய ராணுவம் இந்திய ராணுவத்தினருக்கு அளித்து வருகிறது.