Rajya Sabha Election 2022: பல புகார்களுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு
Rajya Sabha Election 2022: ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவை தேர்தல் தற்போது நடந்து வருகிறது.
மாநிலங்களவை தேர்தல் 2022: ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவை தேர்தல் தற்போது நடந்து வருகிறது. குதிரைபேரம் மற்றும் குறுக்கு வாக்குப்பதிவு ஆகிய புகார்களுக்கு மத்தியில் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடையும். மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மொத்தம் உள்ள 16 தொகுதிகளில், மகாராஷ்டிராவில் 6 மாநிலங்களவை இடங்களிலும், ஹரியானாவில் 2 இடங்களிலும், கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் தலா 5 இடங்களிலும் தேர்தல் நடக்கிறது.
மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா மற்றும் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களின் அரசியல் எதிர்காலம் இன்று முடிவு செய்யப்படும்.
மேலும் படிக்க | மாநிலங்களவை தேர்தலில் வெற்றிக்கு தேவையான ஆதரவு உள்ளது: டாக்டர் சுபாஷ் சந்திரா
57 மாநிலங்களவை இடங்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இரு ஆண்டு தேர்தல்களுக்குப் பிறகு, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர், உத்தரகண்ட், ஜார்கண்ட் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 41 வேட்பாளர்களும் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநிலங்களவையில் 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 12 நியமன உறுப்பினர்கள் உட்பட 245 உறுப்பினர்கள் உள்ளனர். 233 உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும், கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைத் துறைகளில் இருந்து மீதமுள்ள 12 பேரை இந்தியக் குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கிறார்.
இதற்கிடையில், ‘நான் கார்த்திகேய ஷர்மாவுக்கோ அல்லது வேறு எந்த வேட்பாளருக்கோ வாக்களிக்க மாட்டேன். இன்றைக்கு நான் ஆப்செண்டாக இருப்பேன். ஹரியானா மக்களுடன் நான் தொடர்ந்து நிற்பேன். இங்கு எம்.எல்.ஏ.க்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் 'மண்டி' உள்ளது. எனக்கு பல சலுகைகள் கிடைத்தன. ஆனால் யாரும் என்னை வாங்கவோ மிரட்டவோ முடியாது’ என்று ஹரியானாவில் சுயேச்சை எம்.எல்.ஏ-வான பால்ராஜ் குண்டு கூறியதைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | COVID-19: வந்துவிட்டதா நான்காவது அலை? ஒரே நாளில் புதிதாக 7,584 பேர் பாதிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR