தொழில்நுட்பம் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும்: மாநிலங்களவை எம்பி சுபாஷ் சந்திரா
இன்று அரசியலமைப்பு மகாத்மா காந்தி கற்பனை செய்தது போல் இல்லை. காந்திஜியின் சுயராஜ்ஜியத்தின் அர்த்தம் கிராம அளவிலேயே கட்டுப்பாட்டை அளிப்பதாகும்.: டாக்டர் சுபாஷ் சந்திரா
ஜீ மீடியா நிறுவனரும், எஸ்செல் குழுமத்தின் தலைவரும், ராஜ்யசபா எம்பி-யுமான டாக்டர் சுபாஷ் சந்திரா, ஐஐஐடி ஹைதராபாத் கருத்தரங்கில் உரையாற்றினார். அப்போது, கிராமங்களில் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக அணுகுமுறை தொடர்பாக சில முக்கியமான அம்சங்களை பற்றி பேசினார்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று டாக்டர் சுபாஷ் சந்திரா கூறினார். மேலும், "மனிதர்கள் மூன்று நிலைகளில் உள்ளனர். ஒன்று விழித்திருப்பது, இரண்டாவது உறங்குவது, கனவு காண்பது, மூன்றாவது ஆழ்ந்த உறக்கம்” என்று கூறினார்.
“ஒன்றாகச் செயல்படுவோம்... புதிய கருத்தாக்கங்களை உருவாக்குவோம்..நாமே ஏன் ஒரு பிளாக் செயினை உருவாக்கக் கூடாது.. படம் பார்க்கும் போது அனைவரின் எண்ணங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல கருத்தாக்கங்களை உருவாக்கலாம்... இன்று டெலிவரிகளுக்கு டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.. வயதைக் குறைக்கும் தொழில்நுட்பமும் தற்போது கிடைக்கிறது. தொழில்நுட்பத்தில் நன்மைகளும் உள்ளன, தீமைகளும் உள்ளன. ஓடிடி, திரையரங்குகள் இரண்டும் எதிர்காலத்தில் தொடரும் ...ஓடிடி உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் வாய்ப்பை அத்கரிக்கிறது.. ஒரு கட்டத்தில் விசிஆர்-களில் திரைப்படங்களைப் பார்த்தோம்.... இப்போது ஓடிடி-இல் நேரடியாகக் கட்டுப்படுத்தி திரைப்படங்களைப் பார்க்கிறோம்." என்றார் சுபாஷ் சந்திரா.
மேலும் படிக்க | நீட் தேர்வை ஒத்தி வைக்கக்கோரிய மனு.. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
டாக்டர் சுபாஷ் சந்திரா, காந்தியடிகள் கிராமங்களின் வலிமைக்காக உழைத்தார் என்று கூறினார். "இன்று அரசியலமைப்பு மகாத்மா காந்தி கற்பனை செய்தது போல் இல்லை. காந்திஜியின் சுயராஜ்ஜியத்தின் அர்த்தம் கிராம அளவிலேயே கட்டுப்பாட்டை அளிப்பதாகும்.” என்றார் அவர்.
"தொழில்நுட்பம் மனிதர்களுடன் ஆழமான இணைப்பைக் கொண்டுள்ளது. இதற்கு முதலில் மனிதனை தொழில்நுட்பம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மனிதன் மூன்று நிலைகளில் வாழ்வதாக வேதங்களில் கூறப்பட்டுள்ளது. முதலாவது விழித்திருக்கும் நிலை, இரண்டாவது நிலை கனவு காணும் நிலை, மூன்றாவது உறக்க நிலை. ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அந்த நேரத்தில் அவர் இறந்தவர் போல் இருக்கிறார்.
1990 களில் நாங்கள் ஜீ டிவி-ஐ தொடங்கிய போது, தொழில்நுட்பத்தில் ஒரு தீவிரமான மாற்றம் ஏற்பட்டது. உண்மையுடன் தொடர்பில்லாத பல விஷயங்கள் வரலாற்றில் உள்ளன. ஒரு உதாரணம் சொல்கிறேன். முகலாயர்களுடன் நடந்த போரில் மகாராணா பிரதாப் தோற்கடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. ஆராய்ச்சி செய்த போது மகாராணா பிரதாப் முகலாயர்களை தோற்கடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான வரலாற்று சான்றுகள் ஜோத்பூர் பல்கலைக் கழகத்திலும் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பிற நபர்களிடமும் உள்ளது" என்று விளக்கினார் டாக்டர் சந்திரா.
"தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நல்லதும் கெட்டதும் ஒன்றாகச் செல்வது போலவே, தொழில்நுட்பத்தையும் நல்ல மற்றும் கெட்ட செயல்களுக்குப் பயன்படுத்தலாம். எனவே, தொழில்நுட்பம் நல்லதுக்கும் பயன்படுத்தப்படும் அதே வேளையில், அது தீமைக்கும் துணை போகலாம்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | மாநிலங்களவை எம்.பி தேர்தல் - ஜூன் 10ம் தேதி அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR