இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்றனர். முன்னதாக ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை வீரர்களால் அழைத்து வரப்பட்டார்.


புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி அன்று நடைபெற்றது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை ஜூலை 20-ம் நடைபெற்றது. ஆரம்ப முதலே ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக மொத்தமுள்ள 10,98,882 வாக்குகளில் 7,02,644 லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்று ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். 


குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார்.


இதனையடுத்து, பார்லிமென்ட் மைய மண்டபத்தில் ஜனாதிபதி பதவியேற்பு விழா நடந்தது. இன்று மதியம் 12 மணியளவில் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் ராஜ்காட் சென்று, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


அதை தொடர்ந்து, அவர் ஜனாதிபதி மாளிகை சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். பின்னர் இருவரும் ஒரே காரில் பார்லிமென்ட் மைய மண்டபத்திற்கு குதிரைப்படை வீரர்கள் அழைத்து சென்றனர். அங்கு, ராம்நாத் கோவிந்தை துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்றனர்.



12:15 மணியளவில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு பிரணாப் வாழ்த்து தெரிவித்தார். பதவியேற்ற நேரத்தில் 21 குண்டுகள் முழங்கின.


இந்திய நாட்டின் 14வது ஜனாதிபது ராம்நாத் கோவிந்த் அதிகாரபூர்வமாக தனது குடும்பத்தாருடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்குவார்.


இதனிடையே தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறினார். டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் பிரணாப் முகர்ஜிக்கு 10-ம் எண் கொண்ட அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.