சூரத்: குஜராத் மாநிலம் சூரத்-ல் அரியவகை பச்சைநிற ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டவிரோதமாக விற்பதற்காக குஜராத்தில் வைக்கப்பட்டிருந்த அரியவகை பச்சைநிற ஆமைகள் விற்பனையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


சூரத் அருகே உள்ள உதானா தர்வாஜா என்னும் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் அக்வாரியம் என்ற வண்ண மீன்கள் விற்பனையகத்தில் இருந்து இந்த அரியவகை பச்சைநிற ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இந்த விற்பனைகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பெயரில் அப்பகுதி காவல்துறையினர் இந்த ஆமைகளை மீட்டுள்ளனர். இந்த சோதனையில் 160 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 


இந்த வழக்கு தொடர்பாக ஹிந்துஸ்தான் அக்வாரியத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.