Rare Fetus In Fetu: மருத்துவ ரீதியில் வினோதமான மற்றும் வியக்க வைக்கும் வகையில், ஒரு நபர் தனது இரட்டை உடன்பிறப்புடன் 36 வருடங்களாக தனக்குள் வைத்து வாழ்ந்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகாராஷ்டிரா நாக்பூரைச் சேர்ந்த சஞ்சு பகத், அவரது குழப்பமான உடல் தோற்றத்திற்காக, குறிப்பாக கர்ப்பமாகமானதை போன்று தோன்றியதால் உள்ளூரில் அதிகம் கவனம் பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பகத் தனது குழந்தைப் பருவத்தில், அவரது கவனிக்கத்தக்க சற்றே பெரிய வயிறுடன் இருந்தபோதிலும், மற்ற ஆரோக்கியமான குழந்தைகளைப் போல்தான் இருந்துள்ளார். இருப்பினும், அவரின் இருபதாவது வயதில் இருந்து அவரது வயிறு கட்டுப்பாடில்லாமல் வீங்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. 


வயிறு பெரிதாகி வந்தாலும் அதனை பகத் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். 1999இல் ஒரு நாள் பகத்தை பாடாய்படுத்தியுள்ளது. அப்போது அவரது மார்புக்கும், வயிறுக்கும் இடையே அந்த வீக்கம் மிகவும் அழுத்தியுள்ளது. இதனால், அவருக்கு சுவாசிக்க கடினமாக இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 


மேலும் படிக்க | திருப்பதியில் பாதயாத்திரை சென்ற சிறுவனை இழுத்துச்சென்ற சிறுத்தை: பகீர் சம்பவம்


அறுவை சிகிச்சை


முதற்கட்டமாக பகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வயிற்றில் கட்டியால் அவதிப்பட்டதாக சந்தேகித்தனர். அவர்கள் ஒரு மருத்துவ அதிசயத்தைக் காணப்போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. பகத் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்குள் இருந்து முழுமையாக உருவான மனிதனை மீட்டெடுக்க மருத்துவக் குழுவினருக்கு வியப்பு ஏற்பட்டுள்ளது. 


பார்க்க மறுத்த பகத் 


பகத்தின் உடலில் இருந்து வெளிப்பட்ட உறுப்புகள், பிறப்புறுப்புகள் மற்றும் முடிகளின் வரிசையை நினைவுபடுத்தும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வை மருத்துவர் தெளிவாக விவரித்தார். இந்த அசாதாரண நிகழ்வு "கருவில் கரு" என அடையாளம் காணப்பட்டது, இது மிகவும் அரிதான நிலை. இதில் ஒரு இரட்டையர் மற்றவரின் உடலுக்குள் கருவுற்றிருக்கும். வியக்கத்தக்க கண்டுபிடிப்பு இருந்தபோதிலும், பகத் சதை மற்றும் முடியின் கட்டியில் இருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டார். அதை ஒரு பார்வை கூட பார்க்க மறுத்தார்.


மருத்துவ அதிசயம்


மேலும் கருவில் கரு, ஒன்று அல்லது இரண்டு இரட்டையர்களும் பிறப்பதற்கு முன்பே இறந்துவிடுகின்றன, ஏனெனில், பகிரப்பட்ட நஞ்சுக்கொடியில் ஏற்படும் அழுத்தத்தால் இறப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பகத் இரட்டையர் உயிர் பிழைத்து பிரசவித்தது மட்டுமல்லாமல், இரட்டையர் மற்றவருக்குள் தொடர்ந்து வாழ்ந்தும் வந்துள்ளது. அந்த இறுதி அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே அது இறந்துவிட்டது. 


சஞ்சு பகத்திற்கு, அவரது நிலை மருத்துவர்களுக்கு ஒரு மருத்துவ அதிசயமாக இருந்திருக்கலாம், ஆனால் அவருக்கு அது அவமானத்தையும் அவலத்தையும் ஏற்படுத்தியதாகவே தெரிகிறது. ஏனெனில் அவருக்கு அருகில் வசிப்பவர்கள் இரக்கமின்றி அவரை தொடர்ந்து கேலிக்கு உள்ளாக்கி வந்துள்ளனர்.


மேலும் படிக்க | பைக்கில் விபரீத ரொமான்ஸ்... இதெல்லாம் ரோட்ல பண்ணலாமா - உச்சகட்ட கோபத்தில் நெட்டிசன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ