இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை கவர்னர் டி ரவிசங்கர் திங்களன்று கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும் என்றும் இது பொன்சி முறைமை (Ponzi scheme) திட்டங்களை விட மோசமானது என்று கூறினார். இது நாட்டின் நிதி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக  இருக்கும் எனவும் கிரிப்டோ தொழில்நுட்பமானது அரசாங்கம் விதிக்கும் கட்டுப்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும், ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி அமைப்பைத் தவிர்ப்பதற்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சங்கர் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரிப்டோ கரன்சியை தடை செய்வது நல்லது


கிரிப்டோகரன்சிகள், நிதி அமைப்பு, நிதி அதிகாரம், வங்கி அமைப்பு மற்றும் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் திறனை அழிக்கக்கூடும் என்று அவர் கூறினார். இந்திய வங்கிகள் சங்கத்தின் 17வது ஆண்டு வங்கி தொழில்நுட்ப மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஷங்கர், "இந்த காரணிகளை எல்லாம் பார்க்கும்போது, ​​கிரிப்டோகரன்சிகளை தடை செய்வது இந்தியாவிற்கு மிகவும் பொருத்தமான வழி எனலாம் என்றார்.


நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்


இதற்கு முன்பே, கிரிப்டோகரன்சிகளை சட்டப்பூர்வமாக்குவதற்கு எதிராக ஆர்பிஐ பேசியது. அதனை அங்கீகரிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என மத்திய வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் இது நல்லதல்ல எனவும் கூறப்பட்டது. 


மேலும் படிக்க| RBI வெளியிடும் ₹75, ₹100, ₹125 நினைவு நாணயங்கள்; பெறுவது எப்படி..!!!



கிரிப்டோகரன்சிகளில் முதலீடு கட்டுப்படுத்தப்படவில்லை  என்றால், முதலீடுகள் மீது இந்திய அரசாங்கத்திற்கு கட்டுப்பாடு ஏதும் இருக்காது என்பதோடு, போதைப்பொருள் வணிகம், பயங்கரவாத நிதி ஆகியவற்றுக்கான நிதியாக இதை பயன்படுத்தப்படும் ஆபத்தும் உள்ளது. இதனால், பெரிய அளவில் பணமோசடி ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் நிபுணர்கள் தொட்டர்ந்து எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அலிபாபா உட்பட 54 சீன செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR