ஆர்பிஐ புதிய 500 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. இதில் ஆங்கில எழுத்தான A இடம் பெற்று இருக்கும் என்று இன்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் புதிய 500 ரூபாய் நோட்டில் E என்ற ஆங்கில எழுத்து உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கறுப்புப் பண புழக்கம் மற்றும் லஞ்சத்தை கட்டுப்படுத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி அன்று தடை செய்து புதிய நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருந்தார். 


இந்நிலையில் காந்தி படம் கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும் என்று இன்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. 


இதுதொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை:-


> புதிய 500 ரூபாய் நோட்டில் காந்தி படமும் இருக்கும். 


> புதிதாக A என்ற ஆங்கில எழுத்து மட்டும் சேர்க்கப்படும். 


> இந்த ஆங்கில எழுத்து number panelகளுக்கு அருகில் இருக்கும். 


> ஆர்பிஐ கவர்னர் டாக்டர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்து இடம் பெற்று இருக்கும்.


> 2017 என்று அச்சிடப்பட்டு இருக்கும்'.


> அளவு 66மிமீ x 150மிமீ இருக்கும்


> கல் சாம்பல் (stone grey) நிறத்தில் இருக்கும்


என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.