வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை? -RBI விளக்கம்...
வங்கிகளுக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என இந்தியன் ரிசர்வ் வங்கி உறுதிபடுத்தியுள்ளது!
வங்கிகளுக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என இந்தியன் ரிசர்வ் வங்கி உறுதிபடுத்தியுள்ளது!
வங்கிகளுக்கு வாரம் ஆறு நாள் பணி என்னும் நடைமுறை தற்போது வழக்கத்தில் உள்ளது, மேலும் இரட்டைபடை சனி கிழமைகளில் விடுப்பும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று வங்கிகளுக்கு இனி ஐந்து நாட்கள் பணி மற்றும், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வங்கிகள் செயல்படும் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இரட்டை படை சனி அன்று விடுப்பு என்னும் வழகத்தை கைவிட்டு அனைத்து சனி கிழமைகளிலும் விடுப்பு என்னும் நடைமுறை வழக்கத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் ஊடகங்களில் வெளியான இந்த செய்தி தவறானது எனவும், அவ்வாறான அறிவிப்புகள் எதுவும் இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் தெரிவிக்கையில்., "ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் பேரில் வங்கிகளுக்கு ஐந்து நாள் பணி என்னும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் உண்மையில் சரியானது இல்லை, ரிசர்வ் வங்கி அவ்வாறான அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை" என தெரிவித்துள்ளார்.
வங்கி ஊழியர்கள் நெடு நாட்களாக 5 நாள் பணி என்னும் நடைமுறைக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இவ்வாறான செய்திகள் தவறுதலாக பரவி இருக்கலாம் என தெரிகிறது. எனினும் இதுவரையில் வங்கி ஊழியர்களின் 5 நாள் பணி என்னும் நடைமுறைக்கு ரிசர்வ் வங்கி செவிசாய்க்க வில்லை என்பது.
முன்னதாக இந்திய வங்கி சங்கம்(IIBA) 5 நாள் பணி நடைமுறை குறித்து நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரைத்ததாகவும், இது நாள் வரை இந்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.