Do You Need To Submit Fresh KYC Details Again: ஒருவர் வங்கியில் கணக்கைத் திறக்கும்போது, அவரது அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரத்தை (Identity) சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக பான் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உட்பட பல ஆவணங்களை வங்கி உங்களிடம் கேட்கிறது. இந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து வங்கியில் கணக்கைத் திறந்தவுடன், மீண்டும் இந்த ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்குமாறு வங்கி உங்களிடம் கேட்க முடியுமா? என்ற கேள்வி வங்கி வாடிக்கையாளரின் மனதில் எழலாம். இதைப்பற்றி இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்ன கூறுகின்றன என்பதை அறிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில தினங்களாக டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சி (KYC) விவரங்களை வங்கிக்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் வங்கி கணக்கு முடக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இது வாடிக்கையாளர்கள் இடையே பெறும் குழப்பதை ஏற்படுத்தியது. இதுக்குறித்து ஆர்பிஐ வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.


KYC குறித்து ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் என்ன?


ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி,  உங்கள் கேஒய்சி விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றால் மற்றும் நீங்கள் வங்கிக்கு முன்பு வழங்கிய உங்கள் கேஒய்சி தொடர்பான அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றால், நீங்கள் அவற்றை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அத்தகைய சூழ்நிலையில் வாடிக்கையாளர்களின் சுய அறிவிப்பு போதுமானது. இதற்காக வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம் அல்லது இணையம்/ஆன்லைன் வங்கி மூலம் கேஒய்சி விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று நீங்கள் அறிவிக்கலாம். அத்தகைய வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க: வங்கி எச்சரிக்கை: உடனே இதை செய்யாவிட்டால் யாருக்கும் பணம் அனுப்ப முடியாது!


ஒருவேளை உங்கள் முகவரி மாறியிருந்தால், உங்கள் புதிய முகவரித் தகவல் மற்றும் அதன் ஆவணச் சான்று (Address Proof) மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் கேஒய்சில் உள்ள முகவரியைத் தவிர மற்ற அனைத்து விவரங்களும் முன்பு போலவே இருந்தால், வங்கிக் கிளைக்குச் செல்லாமல், ஆன்லைன் மூலம் புதிய முகவரிச் சான்றையும் சமர்ப்பிக்கலாம். வாடிக்கையாளர் புதிய முகவரிச் சான்றைச் சமர்ப்பித்த இரண்டு மாதங்களுக்குள் வங்கிகள் புதிய முகவரிச் சான்றினைச் சரிபார்க்கலாம்.


எப்போது புதிய கேஒய்சி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்?


ஏற்கனவே வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட உங்கள் ஆவணங்களில் பாஸ்போர்ட், ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணம் இல்லை என்றால், கேஒய்சியின் கீழ் புதிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு வங்கி உங்களைக் கேட்கலாம்.


வங்கியில் உங்கள் செல்லுபடியாகும் கேஒய்சி ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் காலாவதியாகிவிட்டால், உதாரணமாக, வங்கிக்கு வழங்கப்பட்ட உங்கள் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால், அதன் இடத்தில் புதிய செல்லுபடியாகும் ஆவணத்தை உங்களிடம் கேட்கலாம்.


KYC வீடியோ அழைப்பு மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்


கேஒய்சி அப்டேட் செய்யும் செயல்முறையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த மிகவும் எளிதாக்கியுள்ளது. வங்கிக் கிளைக்கு செல்லாமல், வீடியோ அழைப்பு (V-CIP) மூலமாகவும் வாடிக்கையாளர் ஆவணங்களை சமர்பிக்கலாம். 


மேலும் படிக்க: பான் கார்டுக்கும் Expiry Date உள்ளதா? இந்த முக்கியமான ஆவணம் எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ