மறு நியமன விவகாரம்: ராஜன் விளக்கம்
மும்பையில் இன்று நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரகுராம் ராஜன், "வரும் செப்டம்பர் மாதத்துடன் எனது பணிக்காலம் முடிவடைகிறது. அதன் பின்னர் எனது பணிக்காலம் நீடிக்கப்படுமா இல்லையா என்பது ஊடகம் மற்றும் சமுகவலைத்தளங்களில் விவாத பொருளாக ஆகியிருக்கிறது. எனவே தற்போது இது தொடர்பாக ஏதாவது கூறி ஊடகங்களின் மகிழ்ச்சியை நான் குலைக்க விரும்பவில்லை.
எது நடந்தாலும் ஊடகங்களுக்கு நிச்சயம் தெரியவரும். எனவே அது வரை யூகங்கள் தொடரட்டும். எனது மறு நியமன விவகாரம் குறித்து பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் அளித்துள்ள விளக்கமே போதுமானதாகக் நான் கருதுகிறேன் என்று கூறினார்.
ஆதரவு:-
இந்தியப் பொருளாதாரத்தை வேண்டுமென்றே சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படும் ரகுராம் ராஜனைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி ஏற்கனவே 2 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விசியம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள ரகுராம் ராஜனுக்கு 2-வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று இணையதளம் மூலமாக 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.