+1 வகுப்பின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பாடப்புத்தகங்களின் விலை 5 மடங்கு வரை உயர்வு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடை விடுமுறை காலத்தைப் பயன்படுத்தி, பள்ளிகளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என தமிழக கல்வி துறை அமைச்சகமும் பள்ளிகள்ர்க்கு அறிவுறித்திருந்தது அடிப்படடை வசதிகள் மற்றும் அங்கீகாராம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அதேவேளையில், அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் செய்து வருகின்றனர். கடந்த மாதம் முதல் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு நடத்திவருகின்றனர்.


இந்த ஆண்டு சுவாரசியமான தகவல் என்னவென்றால்; பள்ளிகள் திறக்கும் முதல் நாளே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீறுடைகள் வழங்கப்பவுள்ளன. மேலும், இந்த ஆண்டு அரசு பள்ளிகளுக்கான சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளதுபள்ளி திறக்கும் முதல் நாளே, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தேதிகளும், அதோடு தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கபடும் என தெரிகிறது.


மேலும், தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் இரண்டாம் வாரத்திலிருந்து புதிய பாடத்திடத்தின் அடிப்படையிலான பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இந்தப் புத்தகங்களின் விலை 50 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்ந்துள்ளது. 


70 ரூபாயாக இருந்த உயிரி-விலங்கியல் புத்தகங்ளகளின் விலை 230 ரூபாயாக உயர்ந்துள்ளது. கணக்குப் பதிவியல் புத்தகத்தின் விலை 50 ரூபாயிலிருந்து 280 ரூபாயாக அதிகரித்துள்ளது. 


புதிய பாடத்திட்டத்தின் கீழ் உயிரியல் பாடத்தில் தாவரவியல், விலங்கியல் ஆகிய பிரிவுகளுக்கு தலா இரண்டு புத்தகங்கள் அறிமுகமாகியுள்ளன. இதற்கு முன் இரு பிரிவுகளுக்கும் தலா ஒரு புத்தகம் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. கணக்குப் பதிவியல், ப்யூர் சயின்ஸ் பிரிவின் விலங்கியல், தாவரவியல் பாடங்களுக்கும் இரு புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்துறை சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு காலை 9.30 மணிக்குள் வர வேண்டும். பைக், தொலைபேசிகளுக்கு அனுமதி இல்லை. ஜீன்ஸ், லோஹிப் பாண்டுகள் அணியக்கூடாது. கையில் கயறு மற்றும் பேண்ட் போன்றவை அணிய தடை. மீசை மற்றும் தாடிகள் வைக்க கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பள்ளி நிர்வாக துறை!