டெல்லி JNU-வில் குளிர்கால பருவத்திற்கான பதிவு தொடங்கப்பட்டு இருப்பதாக JNU துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஞாயிற்றுக்கிழமை மாலை, JNUSU தலைவர் ஆயி கோஷ் உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகமூடி அணிந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக AIIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். JNU-க்குள் நுழைந்து மாணவர்களையும், பேராசிரியர்களையும் குச்சிகள் மற்றும் கம்பிகளால் தாக்கிய அந்த மர்ம கும்பல் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.


JNU நிர்வாகமும் அரசியல் தலைவர்களும், அரசியல் எல்லைகளைத் தாண்டி, மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை வலியுறுத்தி வருகின்றனர். 



இதனிடையே JNU வன்முறைக்கு காரணம் இடதுசாரி கட்சிகள் தான் எனவும், காங்கிரஸ் தலைவர்களும் இதற்கு காரணம் என்று பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.


என்றபோதிலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) நடைப்பெற்ற வன்முறைக்கான பொறுப்பை இந்து ரக்ஷா தளம் ஏற்றுக்கொண்டது. "JNU என்பது தேசிய விரோத நடவடிக்கைகளின் மையமாகும், இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. JNU-வில் நடந்த தாக்குதலுக்கு நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம், அவர்கள் எங்கள் தொழிலாளர்கள் என்று கூற விரும்புகிறோம்" என்று இந்து ரக்ஷத் தளத் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார்.


அரசாங்க வட்டாரங்களின்படி, சவுத்ரி கூறிய கூற்றுக்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.


JNU-வை தாக்கிய முகமூடி அணிந்த குண்டர்கள், டெல்லி காவல்துறை வீடியோ காட்சிகள் மற்றும் முகம் அடையாளம் காணும் அமைப்புகளின் உதவியை மேற்கொண்டு வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்நிலையில் தற்போது JNU-வில் குளிர்கால பருவத்திற்கான பதிவு தொடங்கப்பட்டு இருப்பதாக JNU துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து JNU துணை வேந்தர் ஜகதீஷ் குமார் தெரிவிக்கையில்., "ஜனவரி 5, ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க விவாதங்களுக்கு எங்கள் வளாகம் பெரும்பாலும் அறியப்படுகிறது. எந்த பிரச்சனைக்கும் வன்முறை ஒரு தீர்வு ஆகாது. பல்கலைக்கழகத்திற்கு இயல்புநிலை திரும்புவதை உறுதி செய்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் கண்டு வருகிறோம்.


அந்த வகையில் தற்போது பருவத்திற்கான மாணவர்கள் பதிவு செயல்முறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இப்போது குளிர்கால செமஸ்டருக்கு பதிவு செய்யலாம். ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கி, கடந்த காலத்தை பின்னால் வைப்போம்." என்று மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.