விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் பேரணி!
விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி நாசிக் முதல் மும்பை வரை 30,000 விவசாயிகள் பேரணி
மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி..!
மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிஷான் சபா விவசாய சங்கத்தினர் சுமார் 40
ஆயிரம் பேருடன் கடந்த 5-ம் தேதி நாசிக்கில் பேரணியை தொடங்கினர். மாநில அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சட்டசபையை நோக்கி அவர்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி நாசிக் முதல் மும்பை வரை 30,000 விவசாயிகள் பேரணி.
நாசிக்கில் தொடங்கிய இந்த பேரணி இன்று தானே மாவட்டத்தை வந்தடைந்துள்ளது. 180 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாகவே வந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். தினமும் 30 கி.மீ நடக்கும் இந்த பேரணி நாளை மும்பையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.