2 குழந்தைளுக்கு மேல் உள்ள பெற்றோரின் வாக்குரிமைகளை பறிக்க வேண்டும் என்று யோகா குருவும், தொழிலதிபருமான ராம்தேவ் வலியுறுத்தி இருக்கிறார்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ், உத்தரகாண்ட்டில் நேற்று நடந்த பதஞ்சலி யோகபீடத்தில் பேசியபோது, தம்மைப் போன்று திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் கவுரவிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து அவர் பேசுகையில், ``எங்களைப் பாருங்கள், எங்களுக்கு மனைவி கிடையாது; பிள்ளைகள் கிடையாது. அதனால்,  நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் பாருங்கள். நான் எங்கு போனாலும் குடும்பத்தை கூட்டிச் செல்லவேண்டியது இல்லை. 


நான் பதஞ்சலி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். ஒருவேளை நான் கல்யாணம் முடித்து குழந்தை பெற்றிருந்தால், அவர்கள் பதஞ்சலி நிறுவனத்தைச் சொந்தம் கொண்டாடியிருப்பார்கள். அதேநேரம், கல்யாணம் செய்துகொள்வது ஒன்றும் ஈஸி கிடையாது. அது மிகவும் கஷ்டம். தற்போது பலரும் கல்யாணம் முடித்துக் கொள்கிறார்கள். கல்யாணம் முடித்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டால், அவர்களை வளர்ப்பதற்கே உங்கள் வாழ்க்கையைக் கொடுக்கவேண்டியிருக்கும். 



மக்கள் தங்கள் குடும்பங்களுக்காகவே உழைக்கிறார்கள். கல்யாணம் முடித்துக்கொள்பவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். யாரெல்லாம் கல்யாணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டார்களோ அவர்களது ஓட்டுரிமையை ரத்துசெய்ய வேண்டும்" எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.


மேலும், இந்திய மக்கள் தங்களது பொறுமையை இழந்து வருவதாகவும் ராம்தேவ் தெரிவித்தார்.