பிராட் கேஜ் என்ஜின்களை பங்களாதேஷுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்  இனைய வசதி மூலம் மெய்நிகர் நிகழ்ச்சியில் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லி (New Delhi): இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான இருதரப்பு பொருளாதார நடவடிக்கையை மேம்படுத்துவதற்கும் அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஆன தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில் இந்தியா, 10 ரயில்வே என்ஜின்களை பங்களாதேஷுக்கு ஒப்படைத்தது.


இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில், பங்களாதேஷ் தரப்பில் இருந்து, அந்நாட்டு ரயில்வே அமைச்சர் நூருல் இஸ்லாம் சுஜன் மற்றும் வெளியுறவு அமைச்சர் அபுல் கலாம் அப்துல் மோமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ALSO READ | Rafale ஒப்பந்தம்: பிரான்சிலிருந்து 5 ஜெட் விமானங்கள் புதன்கிழமை இந்தியாவை வந்தடையும்


இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மதிப்பின் அடிப்படையில் இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இந்த உறவு, இந்த நெருக்கடி காலத்திலும் வலுவாக உள்ளது என எடுத்துரைத்தார்.


COVID-19 தொற்றுநோய் பரவல்,  இருதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், மேலும் நடப்பு ஆண்டில் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இதுபோன்ற பல  மைல்கற்கள் கடக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


ரயிவே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் உறவை மேம்படுத்துவதில் இரயில்வே துறையில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார  கூட்டணியை மேலும் வலுவடையும் எனவும் அவர் கூறினார்.


"இந்திய அரசின் மானிய உதவியின் கீழ், 2019 அக்டோபர் மாதம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு பயணம் செய்தபோது அளித்த வாக்குறுதியின் படி, என்ஜின்கள் அனுப்பப்பட்டுள்ளது" என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ALSO READ | ராமர் கோவில் பூமி பூஜைக்கு கவுசல்யா பிறந்த ஊர் மண்ணை எடுத்து செல்லும் முஸ்லிம் பக்தர்


"பங்களாதேஷ் ரயில்வேயின் தேவைகளுக்கு ஏற்ப,  இந்திய தரப்பில் என்ஜின்கள் வடிவமைப்பு சிறிது மாற்றப்பட்டுள்ளது. இந்த என்ஜின்கள் பங்களாதேஷில் அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தை கையாள உதவும், ”என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அண்மைய காலங்களில், எல்லை சாலை வழியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் இடையூறுகளை எதிர்கொண்டதால், கோவிட் 19 தொற்றுநோயின் பாதிப்பை சமாளிக்கும் வகையில், இந்தியாவும் பங்களாதேஷும் தங்கள் ரயில்வேக்கு இடையிலான ஒத்துழைப்பை தீவிரப்படுத்தின.


"ரயில் மூலம் மேற்கொள்ளப்படும் வர்த்தகம்,  சிக்கனமானதாக மட்டுமல்லாமல்,  சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருப்பதால், எல்லையில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல உதவியது. ஜூன் மாதத்தில் இரு தரப்பிற்கு இடையில் மிக அதிகமான சரக்கு ரயில் போக்குவரத்து இருந்தது, ”என்று அந்த வெளியுறவு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை எடுத்துச் செல்ல, மொத்தம் 103 சரக்கு ரயில்கள் பயன்படுத்தப்பட்டன.


“சமீபத்தில், இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சரக்கு ரயில் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இது இருதரப்பு வர்த்தகத்தை இது  கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ”என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.