ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி அவர்களின் மருமகன் ராபர்ட் வதேரா பிரிட்டன் தலைநகர் லண்டனில் பணமோசடி விவகாரத்தில் ஈடுபட்டார் என அமலாக்கத் துறை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என்று ராபர்ட் வதேரா தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வரும் 16 ஆம் தேதி வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. மேலும் இன்று(பிப்ரவரி 6) நடைபெறும் அமலாக்கத்துறை விசாரணையில் நேரில் சென்று ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


நீதிமன்றம் உத்தரவுப்படி, இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ராபர்ட் வதேரா ஆஜரானார். அவருடன் அவரது மனைவி பிரியங்கா காந்தியும் வந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்.