Lok Sabha Elections: இந்தியாவின் ஒவ்வொரு திசையில் உள்ள மக்களையும் உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் சமூகங்களை சேர்ந்த மக்களோடு தொடர்பு படுத்தி காங்கிரஸ் மூத்த தலைவரும் காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவுத் தலைவருமான சாம் பிட்ரோடா பேசியது நாடு முழுதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கையில் எடுத்த பாஜக தலைவர்கள் காங்கிரசை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். சாம் பிட்ரோடா வட இந்தியர்களை வெள்ளையர்களோடும், கிழக்கிந்தியர்களை சீனர்களோடும், தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்களோடும், மேற்கு இந்தியர்களை அரேபியர்களோடும் ஒப்பிட்டுப் பேசியது பலரை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்த சர்ச்சைக்கு பிறகு சாம் பிட்ரோடா தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாம் பிட்ரோடாவின் இந்த பேச்சுக்கு பல தரப்பிலிருந்து எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது பிரியங்கா காந்தி வதேராவின் கணவர் ராபர்ட் வதேரா சாம் பிட்ரோடாவின் கருத்தை முட்டாள்தனம் என்று விமர்சித்துள்ளார். 


‘இது ஒரு முட்டாள்தனமான பேச்சு. காந்தி குடும்பத்துடன் தொடர்பில் இருக்கும் ஒரு நபர் எந்த ஒரு நடவடிக்கையை எடுக்கும் முன்னரும் மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டும். தனது பொறுப்புகளை நன்கு கையாள வேண்டும். ’ என்று அவர் கூறினார். தனக்கு சாம் பெட்ரோடாவின் கருத்தில் முற்றிலும் உடன்பாடு இல்லை என கூறிய அவர், ராஜீவ் காந்தியுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஒருவரால், இவ்வளவு படித்த ஒருவரால் எப்படி இப்படி ஒரு கூற்றை வெளியிட முடியும் என கேள்வி எழுப்பினார். 


தேவையில்லாத பிரச்சனை


ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காங்கிரசுக்காக தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகின்றனர். ஆனால் உங்களுடைய ஒரு தேவையற்ற பேச்சு, தேவையில்லாத ஒரு பிரச்சனையை உருவாக்கி, காங்கிரசை குறை கூற பாஜக-வுக்கு ஒரு வாய்ப்பை அளித்து விட்டது.’ என்று ராபர்ட் கூறினார்.


‘அனைவரும் என்னை அரசியல் ரீதியாக பார்க்கிறார்கள், நான் அரசியலில் இருக்கிறேன். ராகுல் காந்தி தொடர்பான கேள்விகள் என்னிடம் எப்போதும் கேட்கப்படுகின்றன. நான் ஒரு தொழிலதிபராக பார்க்கப்படவில்லை. அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கப்படுகிறேன். ஒருவர் ஒரு விஷயத்தை சொல்வதால், நினைப்பதால், அவர் எதிர்பார்ப்பது நடக்கும் என்று அவசியமில்லை.’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | தென்னிந்தியர்களை ஆப்ரிக்கர்கள் எனக்கூறிய காங்.மூத்த தலைவர்! கண்டனங்களுக்கு பிறகு பதவி விலகல்..


சாம் பிட்ரோடாவின் அறிக்கை வெளியானது முதல், பாஜக தலைவர்கள் காங்கிரஸைத் தாக்கி வருகின்றனர். இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலகுகிறார் என்று கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அவரது ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.


தோல் நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்: பிரதமர் மோடி


சாம் பெட்ரோடாவின் கருத்து குறித்து தெலுங்கானா மாநிலம் வாராங்கலில் காங்கிரசை குறிவைத்து பிரதமர் மோடி பேசினார். தோல் நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று பிரதமர் கூறினார். இன்று காங்கிரஸ் இளவரசரின் வழிகாட்டியும் தத்துவஞானியுமான சாம் பெட்ரோடா ஒரு பெரிய ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் என பிரதமர் தெரிவித்தார். 


பரம்பரை வரி குறித்த சர்ச்சை


இதற்கு முன்னரும், சாம் பெட்ரோடா, பரம்பரை வரி குறித்தும் சர்ச்சையான கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்போதும் அது பெரும் பேசுப்பொருளானது. அதன் பின்னர் அவர் தனது கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 


மேலும் படிக்க | ரேபரேலியில் ராகுல் காந்திக்காக பிரியங்கா தீவிர பிரச்சாரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ