திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுதீப் பண்டோபாத்யாய் கைது
சாரதா நிதி நிறுவன மோசடி போன்று ரோஸ் வேலி நிதி நிறுவனத்திலும் பல கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ரோஸ் வேலி நிதிநிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதீப் பண்டோபாத்யாய் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரை சிபிஐ கைது செய்தது.
மத்திய அரசு தன் மீதும் தான் சார்ந்த திரிணாமுல் காங்கிரஸ் மீதும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சுதீப் பண்டோபாத்யாய் குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோல் திரிணாமுல் காங்கிரசின் எம்பி தபஸ் பால் சமீபத்தில் சிபிஐ கைது செய்யதது என்பது குறிப்பிடத்தக்கது.