வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் தந்தால் தரப்படும் நபருக்கு சன்மானம் ரூ. 1 கோடியாக உயர்வு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பினாமி சொத்துக்கள் பற்றி தகவல் தந்தால் ரூ. 1 கோடி ரூபாய் வரையில் சன்மானம் வழங்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது. 


கருப்புப்பணத்தை ஒழிக்கும் முயற்சியில் மக்களின் பங்கு இருக்க வேண்டும் என்ற வகையில் ‘பினாமி சொத்துக்கள் பரிவர்த்னை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி திட்டம் 2018’ என்ற தலைப்பில் வருமானவரித்துறை புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது. 


கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள், பினாமி சொத்துக்கள், சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை, பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்க பொதுமக்களை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். 


அதன்படி, வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் தந்தால் தரப்படும் சன்மானம் ரூ.50 லட்சமாக உயர்த்தியுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி வரை சன்மானம் தரப்படும். இது பற்றி தகவல் தருவோரின் விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.