நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவம்  கேரளாவின் கடற்கரையில் நடந்துள்ளது. கேரளாவில் ரூ. 12,000 கோடி மதிப்புள்ள  Crystal Meth அல்லது மெதாம்ஃபெடமைன் (Methamphetamine) எனும், சட்டென மனிதனை அடிமையாக்கும் மோசமான போதை மருந்தை, கேரளா வழியே இந்தியாவுக்குள் கொண்டுவர முயற்சித்த பாகிஸ்தான் நபர் கைது. செய்தது போதை மருந்து தடுப்பு பிரிவு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) கேரளா  மாநில கடற்கரை பகுதியில் இருந்து 2500 கிலோவுக்கும் அதிகமான Crystal Meth அல்லது மெதாம்ஃபெடமைன் (Methamphetamine) எனும், சட்டென மனிதனை அடிமையாக்கும் மோசமான போதை மருந்தை, பாகிஸ்தான் நாட்டவரிடமிருந்து பறிமுதல் செய்தது. NCB யால் கைப்பற்றப்பட்ட மருந்துகள் தோராயமாக 1.45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 12,000 கோடி ரூபாய் மதிப்புடையவை.


பாகிஸ்தான் பிரஜை மறு அறிவித்தல் வரை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் NCB தெரிவித்துள்ளது. அவர் பயன்படுத்திய விரைவுப் படகு, போதைப் பொருள் பைகள் மற்றும் “மதர் ஷிப்” என்னும் கப்பலில் இருந்த வேறு சில பொருட்களும் கைப்பற்றப்பட்டு கொச்சியில் உள்ள மட்டஞ்சேரி வார்ப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு என்சிபியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Honey Trap செய்து மிரட்டிய கேரள பெண் அஸ்வதி அச்சு..! Fake ID-யிடம் சிக்கிய சின்ராசுகள்!


இந்திய கடற்படை மற்றும் என்சிபி இணைந்து நடத்திய இந்த நடவடிக்கை மூல, தற்போது நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை ஏற்றிச் சென்ற படகு, இந்திய கடற்படையினருக்கு கிடைத்த உளவு தகவலில் அடிப்படையில், தடுத்து நிறுத்தப்பட்டு, இறுதியில் NCBயிடம் ஒப்படைக்கப்பட்டது.


NCB யின் முழு வரலாற்றில் இது மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தல் ஆகும், மேலும் இது ஜனவரி 2022 இல் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சமுத்திரகுப்தாஎன்னும் நடவடிக்கை தொடங்கிய பிறகு பிடிப்படும் மிக அதிக எண்ணிக்கையிலான போதிஅ பொருள் இதுவாகும். NCB இப்போது இந்தியாவில் தெற்குப் பாதையை உள்ளடக்கிய மூன்று பெரிய போதைப்பொருள் கடத்தலை கண்டிபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியப் பெருங்கடலின் கடல்வழிப் பாதை வழியாக போதைப்பொருள் கடத்தலை நிறுத்தும் முயற்சியில் கடந்த ஆண்டு ஆபரேஷன் சமுத்திரகுப்தா என்னும் நடவடிக்கை அதிகாரிகளால் தொடங்கப்பட்டது. கடலில் போதைப்பொருள் பாதை அமைக்கப்பட்டு அதன் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் நாட்டிற்குள் கொண்டு வரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | கடனை அடைக்க 4 வயது மகளை அடமானம் வைத்த குடிகார தந்தை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ